‘சிகரம் தொடு’ கௌரவுடன் இணையும் உதயநிதி!

உதயநிதியும்,கௌரவும் இணையும் படம்!

செய்திகள் 23-Jun-2016 10:40 AM IST VRC கருத்துக்கள்

‘மனிதன்’ படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினும், சுசீந்திரனும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்ற தகவல் வெளியானதோடு அப்படத்தின் பூஜையும் கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி நடைபெற்றது. ஆனால், ‘ரெட் ஜெயன்ட் மூவீஸின்’ 12-வது தயாரிப்பாக உருவாகவிருந்த இப்படத்தை இப்போது கொஞ்சம் தள்ளி வைத்திருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தை விக்ரம் பிரபு நடிப்பில் ‘சிகரம் தொடு’ படத்தை இயக்கிய கௌரவ் இயக்கவிருக்கிறாராம்! உதயநிதி ஸ்டாலினும் கௌரவும் முதல் முதலாக இணையும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சுட்டுப்புடிக்க உத்தரவு டீஸர்


;