‘சேதுபதி’யை தொடர்ந்து ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’

ஜெய்யுடன் இணைய்ம் ப்ரணிதா!

செய்திகள் 22-Jun-2016 1:23 PM IST VRC கருத்துக்கள்

விஜய் சேதுபதி நடிப்பில் ‘சேதுபதி’ படத்தை தயாரித்த ‘வான்சன் மூவீஸ்’ ஷான் சுதர்சன் அடுத்து ஜெய் கதாநாயகனாக நடிக்கும் படத்தை தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் மகேந்திரன் ராஜாமணி இயக்கும் இப்படத்திற்கு ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ப்ரணிதா நடிக்கிறார். இவர்களுடன் கருணாகரன், காளி வெங்கட், நவீன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஒளிப்பதிவை மகேஷ் முத்துசாமி கவனிக்க, சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார். இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜெமினி கணேசனும்சுருளி ராஜனும் - டிரைலர்


;