பூஜையுடன் துவங்கியது ‘வடசென்னை’யின் முதல் பாகம்!

மூன்று பாகங்களாக உருவாகவிருக்கும் ‘வடசென்னை’ படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு இன்று துவங்கியது

செய்திகள் 22-Jun-2016 11:59 AM IST Chandru கருத்துக்கள்

‘ஆடுகளம்’ படம் வெளியான சமயமே, ‘வடசென்னை’ படத்திற்கான அறிவிப்பும் வெளியானது. ஆனால், சில பல காரணங்களால் தள்ளிக்கொண்டே வந்த ‘வடசென்னை’ புராஜெக்ட் இப்போது சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் ‘விசாரணை’ படத்தையும் எடுத்து ரிலீஸ் செய்துவிட்டார் வெற்றிமாறன்.

பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 3வது படமான ‘வடசென்னை’யில் சமந்தா, ஆன்ட்ரியா ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்களாம். அதோடு சமுத்திரக்கனியும் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறாராம். லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படம் மொத்தம் 3 பாகங்களாக உருவாகவிருக்கிறது. அதில் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் துவங்கியிருக்கிறது. இப்படத்தில் தனஷ் கேங்ஸ்டராக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடி - டிரைலர்


;