‘மார்ஷியல் ஆர்ட்ஸ் மன்னன்’ டோனி ஜா வழியில் ஆர்யா?

ராகவன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் கடம்பன் படத்தின் க்ளைமேக்ஸிற்காக தாய்லாந்து சென்றுள்ளது படக்குழு

செய்திகள் 22-Jun-2016 10:58 AM IST Chandru கருத்துக்கள்

‘பெங்களூர் நாட்கள்’ படத்தைத் தொடர்ந்து தற்போது ‘கடம்பன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஆர்யா. ராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்திற்காக, தீவிர உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடம்பை இரும்புபோல் உருவாக்கி வைத்திருக்கிறார் ஆர்யா. கேத்ரின் தெரஸா நாயகியாக நடிக்கும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் காடுகளைச் சுற்றி படமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் ‘கடம்பன்’ படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளுக்காக தற்போது தாய்லாந்து சென்றுள்ளதாம் படக்குழு.

தாய்லாந்து மார்ஷியல் ஆர்ட்டிஸ்ட்டும் பிரபல நடிகருமான டோனி ஜா நடிப்பில் 2008ல் வெளிவந்த ‘ஆங் பாக்’ படத்தின் 2ஆம் பாகத்தில் 100க்கும் மேற்பட்ட யானைகளுக்கு மத்தியில், யானைகளின் மீது டோனி ஜா ஓடும் காட்சி ஒன்றிற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. கிட்டத்தட்ட இதேபோல் 50க்கும் மேற்பட்ட யானைகளுக்கு மத்தியில் ஆர்யா பங்குபெறும் சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்படவிருக்கிறதாம். இதற்காக யானைகளை எப்படி கையாள்வது என்பதற்கான பயிற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளாராம் ஆர்யா. தாய்லாந்தில் உள்ள சியாங் மை என்ற இடத்தில் ஜூலை 1ஆம் தேதி இந்த க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சிகள் படமாக்கப்படவிருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;