ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘வாகா’ சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக்ஸ்ட் 12-ஆம் தேதி ரிலீசாகிறது. இப்படத்துடன் விக்ரம் பிரபு நடித்து வந்த ‘வீரசிவாஜி’ படத்தின் படப்பிடிப்பும் முடிந்து விட்டது! ‘தகராறு’ பட புகழ் கணேஷ் விநாயக் இயக்கும் இப்படத்தில் நடிகை ஷாலினி அஜித்குமாரின் தங்கை ஷாம்லி கதாநாயகியாக நடித்துள்ளார். ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த ‘மெட்ராஸ் என்டர்பிரைசஸ்’ எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபு, ஷாம்லியுடன் ரோபோ சங்கர், ஜான் விஜய், நான் கடவுள் ராஜேந்திரன் முதலானோரும் நடிக்கிறார்கள். ‘வாகா’ படத்திற்கு இசை அமைத்திருக்கும் டி.இமான் தான் இப்படத்திற்கும் இசை அமைப்பாளர். ‘வீரசிவாஜி’யின் படப்பிடிப்பு முடிந்ததை தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிசியாகியுள்ளனர் படக்குழுவினர்! ‘வாகா’, ‘வீரசிவாஜி’ படங்களை தொடர்ந்து எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் விக்ரம் பிரபு. ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரிலீசாகும் ‘வாகா’வை தொடர்ந்து விக்ரம் பிரபுவின் ‘வீரசிவாஜி’யும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’மாஃபியா’. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே,...
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....
இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராகவும், ‘அஞ்சனவித்தை’ என்ற குறும் படத்தை இயக்கி, தமிழக அரசின்...