ஹாரர் சைக்கோ த்ரில்லரா ‘நெஞ்சம் மறப்பதில்லை’?

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா நடிக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் புதிய தகவல்கள்

செய்திகள் 21-Jun-2016 10:42 AM IST Chandru கருத்துக்கள்

சிம்பு நடிக்கும் ‘கான்’ படம் சிற்சில காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை அதிரடியாக இயக்கி வருகிறார் செல்வராகவன். அவரது கேரியரிலேயே மிக வேகமாக படப்பிடிப்பு நடந்து முடிந்த படமாகவும் இதனைக் குறிப்பிடலாம். படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. நேற்று, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டார். வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருந்த இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இன்னும் ஒருசில வாரங்களில் இப்படத்தின் டீஸரையும் வெளியிடவிருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள பாடல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் ஒரு ஹாரர் சைக்கோ த்ரில்லர் என படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்திருக்கிறது. படத்தின் நாயகன் எஸ்.ஜே.சூர்யா ஒரு கட்டத்தில் ‘சைக்கோ’வாக மாறிவிடுவாராம். அதேபோல் நாயகி ரெஜினா கெஸன்ட்ரா பேயாக நடிப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. செல்வராகவன் இயக்கத்தில் ஒரு ஹாரர் சைக்கோ த்ரில்லர் படம் என்ற விஷயமே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கீதாஞ்சலி செல்வராகவனின் ‘க்ளு ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை, கௌதம் வாசுதேவ் மேனனம், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மதனும் இணைந்து வழங்குகிறார்கள். இப்படத்தின் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா வெளியீட்டு உரிமையை ‘சௌத்சைடு ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் தீபக் சாமி வாங்கியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;