தயாரிப்பாளரை பெருமைப்பட வைத்த ‘அருவி’!

டெல்லியில் நடைபெற்ற ‘ Habitat Film Festival’ லில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்ற ‘அருவி’க்கு ஷாங்காய் உலகத் திரைப்பட விழாவிலும் வரவேற்பு கிடைத்துள்ளது

செய்திகள் 21-Jun-2016 10:02 AM IST Chandru கருத்துக்கள்

சகுனி படத்தைத் தொடர்ந்து, கார்த்தி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் ‘காஷ்மோரா’ படத்தை எடுக்கும் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் ‘அருவி’. இப்படத்தை அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ளார். ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவு செய்ய... பிந்து மாலினி, வேதாந்த் பரத்வாஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்கள். படத்தொகுப்பு ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா.

சமீபத்தில், அருவி திரைப்படம் சீனாவில் நடைபெற்ற ‘ஷாங்காய் உலகத் திரைப்பட விழாவில்’ திரையிடப்பட்டது. இவ்விழாவில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபு, இயக்குனர் அருண் ஆகியோர் கலந்து கொண்டனர். திரையிடலுக்குப் பிறகு சீனாவிலிருந்து சென்னை திரும்பிய தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ‘அருவி’ குறித்து தன் நெகிழ்ச்சியை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது....

‘‘ஷாங்காய் உலகத் திரைப்பட விழாவை வெற்றிகரமாக முடித்துவிட்டு சென்னைக்குத் திரும்பிவிட்டோம். அருவி படம் தொடக்கத்திலிருந்தே ஒரு அருமையான அனுபவத்தைத் தந்துகொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், எங்களின் படைப்பிலேயே பெருமை மிகுந்த படைப்பாகவும் எப்போதும் இருக்கும். இன்னும் பல திரைப்பட விழாக்களில் இப்படம் சிறப்பான வரவேற்பைப் பெரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. உள்ளூர்வாசிகளின் உணர்வு சம்பந்தப்பட்ட ஒரு படைப்பிற்கு, வெளிநாட்டு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்ததைப் பார்க்க அத்தனை சந்தோஷமாக இருந்தது. ஒரு அற்புதமான படைப்பைக் கொடுத்ததற்காக இயக்குனர் அருண் உட்பட ‘அருவி’ சம்பந்தப்பட்ட அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்!’’

வரும் ஜூலையில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘ஜோக்கர்’ திரைப்படம் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ‘குக்கூ’ ராஜு முருகன் இயக்கியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;