பிரபல நடிகர் படத்திலிருந்து எஸ்.ஜே.சூர்யா நீக்கம்?

நீண்டநாட்களுக்குப் பிறகு தெலுங்கில் எஸ்.ஜே.சூர்யா இயக்குவதாக இருந்த பவன் கல்யாண் படத்திலிருந்து எஸ்.ஜே.சூர்யா விலகிவிட்டாராம்

செய்திகள் 20-Jun-2016 3:32 PM IST Chandru கருத்துக்கள்

‘இசை’ படத்திற்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யா தெலுங்கு படம் ஒன்றை இயக்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். பவன் கல்யாண் நாயகனாக நடிக்கவிருக்கும் இப்படத்திற்கான பூஜை கடந்த மாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில், திடீரென இப்படத்தின் இயக்குனர் பொறுப்பிலிருந்து எஸ்.ஜே.சூர்யா விலக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தெலுங்கில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவிருக்கும் புதிய படமொன்றில் முக்கிய வில்லன் கேரக்டரில் நடிக்க எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாம். அந்த கேரக்டர் அவருக்கு மிகவும் பிடித்துப்போகவே. உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால், தன் படத்தின் வேலைகள் தொடங்குவதற்கு கால தாமதம் ஆவதாகக் கருதிய பவன் கல்யாண், எஸ்.ஜே.சூர்யாவிற்குப் பதிலாக ‘கோபாலா கோபாலா’ படத்தின் இயக்குனர் கிஷோர்குமார் பர்தசானியை படம் இயக்க அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அசுரன் ட்ரைலர்


;