‘தல 57’ல் ‘கபாலி’ காஸ்ட்யூம் டிசைனர்!

அஜித் நடித்த பில்லா, வேதாளம், ரஜினியின் ‘கபாலி’ ஆகிய படங்களின் காஸ்ட்யூம் டிசைனர் தற்போது ‘தல 57’ படத்திற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

செய்திகள் 20-Jun-2016 3:09 PM IST Chandru கருத்துக்கள்

கிட்டத்தட்ட 130 படங்களை தயாரித்துள்ள சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம், அஜித்தின் 57வது படத்தை தயாரிக்கிறது. இப்படத்தை வீரம், வேதாளம் படங்களை இயக்கிய சிவா இயக்குகிறார். நாயகி உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களுக்கான தேர்வு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அனிருத் இசையமைப்பது ஏற்கெனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு உடை அலங்காரம் செய்யும் பொறுப்பு இயக்குனர் விஷ்ணுவர்தனின் மனைவியும், டிசைனருமான அனுவர்தன் வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இன்றைய தேதியில் ஹாட் டாப்பிக்காக இருக்கும் சூப்பர்ஸ்டாரின் ‘கபாலி’ படத்திற்கும் அனுவர்தன்தான் உடையலங்கார நிபுணராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே அஜித் நடித்த பில்லா, வேதாளம், ஆரம்பம் படங்களிலும் இவர் காஸ்ட்யூம் டிசைனராகப் பணிபுரிந்துள்ளார்.

‘தல 57’ படத்தின் படப்பிடிப்பு, ‘கபாலி’ ரிலீஸ் தினமான ஜூலை 15ஆம் தேதி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விவேகம் - Never Give Up பாடல் வீடியோ


;