விஷாலை எதிர்க்கத் தயாராகும் அதர்வாவின் வில்லன்?

அதர்வா நடித்த ‘கணிதன்’ படத்தின் வில்லன், இப்போது விஷால் நடிக்கும் ‘கத்திசண்டை’ படத்திற்கும் வில்லனாகியுள்ளாராம்

செய்திகள் 20-Jun-2016 2:53 PM IST Chandru கருத்துக்கள்

மாடலாக இருந்து, 1999ஆம் ஆண்டு வெளிவந்த ‘பியார் மே கபி கபி’ படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகராக அறிமுகமானவர் தருண் அரோரா. அதன் பிறகு ஏழெட்டு பாலிவுட் படங்களில் நடித்த தருண், ‘கணிதன்’ படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். இப்படத்தில் அதர்வாவிற்கு வில்லனாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது விஷால் நடிக்கும் ‘கத்தி சண்டை’ படத்திலும் வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம் தருண் அரோரா.

விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கும் ‘கத்தி சண்டை’ படத்தை சுராஜ் இயக்குகிறார். வடிவேலு, சூரி, சம்பத் ராஜ், ஜெகபதி பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தின் பூஜை மே மாதம் நடைபெற்றது. ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;