மிஷ்கின் இயக்கத்தில் இன்னொரு படம்!

‘துப்பறிவாளன்’ படத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்கும் படம்!

செய்திகள் 20-Jun-2016 2:47 PM IST VRC கருத்துக்கள்

இப்போது விஷால் நடிப்பில் ‘துப்பறிவாளன்’ படத்தை இயக்கி வரும் மிஷ்கின் அடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு முதலீடு செய்தவரும், பிரபல தயாரிப்பாளருமான ரகுநந்தன் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார். இப்படத்தில் ரகுநந்தன் மகன் மைத்ரேயா கதாநாயகனாக அறிமுகமாகிறார். மைத்ரேயா லண்டனில் எம்.பி.ஏ.பட்டம் படித்ததோடு, மும்பையிலுள்ள நடிப்பு கல்லூரியில் சினிமாவுக்கு தேவையான அனைத்து பயிற்சிகளையும் பெற்றுள்ளார். மிஷ்கின், மைத்ரேயா இணையும் இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இந்த படத்தில் மைத்ரேயாவுக்கு ஜோடியாக முன்னாள் கதாநாயகனும், குணச்சித்திர நடிகருமான ரவிச்சந்திரனின் பேத்தி தானியா அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’ படப்பிடிப்பு முடிந்ததும் துவங்கும் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கத்திச்சண்டை - நான் கொஞ்சம் பாடல் வீடியோ


;