‘ஐ’க்கு 4, ‘தனி ஒருவனு’க்கு 3 : ஃபிலிம்ஃபேர் விருதுகள்!

63வது ஃபிலிம்ஃபேர் விருது விழாவில் ஷங்கர் இயக்கிய ‘ஐ’ படத்திற்கு 4 விருதுகளும், மோகன் ராஜா இயக்கிய ‘தனிஒருவன்’ படத்திற்கு 3 விருதுகளும் கிடைத்துள்ளன

செய்திகள் 20-Jun-2016 11:12 AM IST Chandru கருத்துக்கள்

தென்னிந்திய சினிமா விருதுகளில் முக்கிய விருதாகக் கருதப்படும் ஃபிலம்ஃபேர் விருதின் 63வது விருது வழங்கும் விழா கடந்த சனிக்கிழமை இரவு ஹைதராபாத்தில் நடைபெற்றது. தம்பதிகளான ராகுல், சின்மயி இருவரும் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள். எமி ஜாக்சன், ராகுல் ப்ரீத் சிங், கேத்ரின் தெரஸா, ப்ரணிதா, ரீமா கல்லிங்கல், அபர்ணா வினோத் ஆகியோர் நடனமாடி வந்திறந்த விருந்தினர்களையும், விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களையும் மகிழ்வித்தார்கள். இந்த விழாவில் தமிழ் சினிமாவுக்கான விருதுப் பிரிவில், ‘ஐ’ திரைப்படம் 4 விருதுகளையும், ‘தனி ஒருவன்’ திரைப்படம் 3 விருதுகளையும் வென்றது. ஒட்டுமொத்த தமிழில் யார், எந்த படம் என்னென்ன விருதுகளை வென்றுள்ளது என்பது கீழே பட்டியலாக கொடுக்கப்பட்டுள்ளது.

1. சிறந்த அறிமுகம் : ஜி.வி.பிரகாஷ் (டார்லிங்)
2. சிறந்த நடிகர் (நடுவர் சிறப்பு விருது) : ஜெயம் ரவி (தனி ஒருவன்)
3. சிறந்த நடிகை (நடுவர் சிறப்பு விருது) : ஜோதிகா (36 வயதினிலே)
4. சிறந்த படம் : காக்கா முட்டை
5. சிறந்த இயக்குனர் : மோகன் ராஜா (தனி ஒருவன்)
6. சிறந்த நடிகர் : விக்ரம் (ஐ)
7. சிறந்த நடிகை : நயன்தாரா (நானும் ரௌடிதான்)
8. சிறந்த துணை நடிகர் : அர்விந்த் சாமி (தனி ஒருவன்)
9. சிறந்த துணை நடிகை : ராதிகா சரத்குமார் (தங்க மகன்)
10. சிறந்த இசையமைப்பாளர் : ஏ.ஆர்.ரஹ்மான் (ஐ)
11. சிறந்த பாடலாசிரியர் : மதன் கார்க்கி (பூக்களே... ‘ஐ’ படத்திலிருந்து)
12. சிறந்த பாடகர் : சித் ஸ்ரீராம் (என்னோடு... ‘ஐ’ படத்திலிருந்து)
13. சிறந்த பாடகி : ஷ்வேதா மோகன் (என்ன சொல்ல... ‘தங்க மகன்’ படத்திலிருந்து)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;