30வது ஃபிலிம்ஃபேர் விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான்!

இந்திய சினிமா விருதுகளில் இதுவரை 120 விருதுகளுக்கும்மேல் வென்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், ஃபிலிம்ஃபேரில் மட்டுமே 30 விருதுகளைக் குவித்துள்ளார்

செய்திகள் 20-Jun-2016 10:50 AM IST Chandru கருத்துக்கள்

வருடத்திற்கு நான்கைந்து விருதுகளையாவது வென்றுவிடுவார் ஏ.ஆர்.ரஹ்மான்... அது சரி இந்தியத் திரையுலகமே அன்னாந்து பார்க்கும் ஆஸ்கர் விருதை இரண்டு கைகளில் ஏந்தியவர் ஆயிற்றே. இந்திய சினிமா விருதுகளைப் பொறுத்துவரை ரஹ்மான் வசம் இல்லாத விருதுகளே இல்லை எனலாம். அந்தளவுக்கு அவர் விருதுகளை வாரிக் குவித்துள்ளார். தனது முதல் திரைப்படமான ‘ரோஜா’வுக்கு தேசிய விருது வென்றதிலிருந்து தொடங்கியது அவரது விருது வேட்டை. அந்த வகையில், ஏ.ஆர்.ரஹ்மான் ஃபிலிம்ஃபேரில் மட்டுமே இதுவரை 30 விருதுகளை வென்று சாதனை படைத்திருக்கிறாராம் ரஹ்மான்.

63வது ஃபிலிம்ஃபேர் விருது விழா கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்றது. அதில், ‘ஐ’ படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த இசைமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டது. இது அவரின் 30வது ஃபிலிம்ஃபேர் விருது என்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்தி படங்களுக்கு 14 விருதுகளையும், தமிழ் படங்களுக்கு 14 விருதுகளையும், தெலுங்கு படத்திற்கு 1 விருது, சிறப்பு விருது ஒன்று என மொத்தம் 30 விருதுகளைக் குவித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார் ரஹ்மான்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;