விஷ்ணு விஷாலுடன் இணையும் மஞ்சிமா மோகன்!

சுசீந்திரன் இயக்கத்தில் மீண்டும் விஷ்ணு விஷால்!

செய்திகள் 20-Jun-2016 10:32 AM IST VRC கருத்துக்கள்

”வெண்ணிலா கபடிக் குழு’, ‘ஜீவா’ ஆகிய படங்களை தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் விஷ்ணு விஷால். ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கிய விஷ்ணுவிற்கு இப்படம் வெற்றிப் படமாக அமைந்தது! ‘வீர தீர சூரன்’, ‘போடா, ஆண்டவனே என் பக்கம்’, ‘வீரா’ என பல படங்களை கையில் வைத்துக் கொண்டு நடித்து வரும் விஷ்ணு விஷால் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கும் என்றும் இதில் விஷ்ணுவிற்கு ஜோடியாக ‘அச்சம் என்பது மடமையடா’ ஹீரோயின் மஞ்சிமா மோகன் நடிக்கவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது! அத்துடன் இப்படத்தின் ஒரு முக்கியமான கேரக்டருக்கு பார்த்திபன் தேர்வாகியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தையும் இயக்க்விருக்கிறார் சுசீந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவராட்டம் ட்ரைலர்


;