‘ராகதேவி புரொடக்ஷன்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பில் ராஜேந்திரன் குப்புசாமி தயாரித்துள்ள படம் ‘தகடு’. இப்படத்தில் பிரபா, அஜய், சனம் ஷெட்டி, பிரியங்கா சுக்லா, ராஜ்கபூர், தீபக் ராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் எம்.தங்கதுரை இயக்கியுள்ள இப்படத்திற்கு எஸ்.கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சார்லஸ் மெல்வின் இசை அமைத்துள்ளார். பாடல்களை இளைய கம்பன் எழுதியுள்ளார். இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அப்போது படம் குறித்து இயக்குனர் கூறும்போது, ‘‘தகடு’ வரலாறு சம்பந்தப்பட்ட கதை. கடுமையான பஞ்சத்தால் ஒரு நாட்டில் ஏற்படும் மாற்றங்களை சொல்லும் இந்த கதையில் எந்த சந்தர்பத்திலும் பேராசை கூடாது என்ற கருத்தையும் வலியுறுத்தியிருக்கிறோம். பழைய காலத்து கதை என்பதால் அதற்கேற்ற இடங்களை தேடி கண்டு பிடித்தும், செட் அமைத்தும் காட்சிகளை படமாக்கியிருக்கிறோம்’’ என்றார்.
விழாவில் இப்படத்தை பற்றி இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், இயக்குனர்கள் பேரரசு, ராஜ்கபூர் தயாரிப்பாளர் ‘பட்டியல்’ சேகர் முதலானோரும் வாழ்த்திப் பேசினார்கள். நடிகர் சத்யராஜ் நடித்து பேசிய ‘தகடு’ என்ற வார்த்தை பிரபலம்! அந்த பிரபல வார்த்தையை தலைப்பாக கொண்ட இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘குண்டு’. இந்த படத்தை தொடர்ந்து தினேஷ் நடிக்க...
இரண்டாம் பாக வரிசையில் உருவாகியுள்ள மற்றொரு படம் ‘நாடோடிகள்-2’. முதல் பாக ‘நாடோடிகள்’ படத்தை இயக்கிய...
உலகம் முழுக்க வெளியாகி பெரும் வசூல் குவித்த ’பாகுபலி’ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில்...