வெங்கட் பிரபு தற்போது ‘சென்னை-28’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். முதல் பாகத்தில் நடித்த ஜெய், சிவா, பிரேம்ஜி அமரன் உட்பட அனைவரும் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள். முதல் பாகத்திற்கு இசை அமைத்த யுவன் சங்கர் ராஜாவே இரண்டாம் பாகத்திற்கும் இசை அமைக்கிறார். இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு ஒரு பிரம்மாண்ட செட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த கிளைமேக்ஸ் காட்சியில் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனர்களாகிய ‘நளனும் நந்தினியும்’ பட புகழ் வெங்கடேஷ் ராமகிருஷ்ணா, ‘வடகறி’ பட புகழ் சரவண ராஜன், ‘கனிமொழி’ பட புகழ் ஸ்ரீபதி, ‘நவீன சரஸ்வதி சபதம்’ பட புகழ் சந்துரு ஆகிய நால்வரோடு ‘காவல்’ படத்தின் இயக்குனரும் வெங்கட் பிரபுவின் நண்பருமான நாகேந்திரனும் நடிக்கின்றனர். ஏற்கெனவே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் இப்படத்தில் இப்போது மேலும் 5 இயக்குனர்கள் இணைந்து நடித்து வருவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இப்பட்த்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...
‘தெரு நாய்கள்’, ‘படித்த உடன் கிழித்து போடவும்’ ஆகிய படங்களை இயக்கிய் ஹரி உத்ரா இயக்கியுள்ள படம்...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...