அதி நவீன மொபைல் ஃபோன் சேவயான வாட்ஸ் அப் குரூப் மூலம் நண்பர்கள் ஒருங்கிணைந்து தங்களுக்குள் தகவல் பறிமாறிக் கொள்கிறார்கள். அரசியல் பேசுகிறர்கள், சமூக சேவைகளில் ஈடுபடுகிறார்கள். அதே நேரம் ஆபாச வீடியோக்களை பறிமாறி கொள்வதற்கென்றே தனி குரூப்பும் வைத்துக் கொள்கிறார்கள. அப்படி பகிரப்படும் ஆபாச வீடியோக்கள் ஃபோனில் வைத்திருப்பதால் விளையும் சம்பவங்களை கொண்டு ஒரு திரைப்படம் உருவாகிறது. இதனை ‘இந்தியன் ஃபிலிம் ஃபேன்ஸ்’ என்ற வாட்ஸ் குரூப்பினர் இணைந்து தயாரிக்கின்றனர். இதனை வித்தியாசமான கதை களத்தில் இயக்குகிறார் சஜோ சுந்தர். இவர் இயக்குனர்கள் ஹரி, ‘பொம்மரிலு’ பாஸ்கர், பிரகாஷ் ராஜ் ஆகியோரிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர். கதையின் தன்மைக்கு ஏற்ப முற்றிலும் புதுமுகளை தேர்வு செய்து இப்படத்தை இயக்கவிருக்கிறார் சஜோ சுந்தர். அதற்கான தேர்வு தற்போது நடந்து வருகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....
சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா கதையின் நாயகனாக நடித்த படம் ‘கழுகு’. இந்த அடம் வெற்றி பெற்றதை...
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...