5 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் ஜெய், அஞ்சலி!

ஜெய், அஞ்சலி மீண்டும் இணையும் படம்!

செய்திகள் 16-Jun-2016 5:02 PM IST VRC கருத்துக்கள்

‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் இணைந்து நடித்த ஜெய், அஞ்சலி ஐந்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை அறிமுக இயக்குனர் சினிஷ் இயக்குகிறார். இது காதல் கலந்த திகில் படமாம்! இப்படத்தின் ஒளிப்பதிவை ஆர்.சரவணன் கவனிக்கிறார். சக்தி வெங்கட்ராஜ் கலை இயக்கத்தையும், ரூபன் படத்தொகுப்பையும் கவனிக்க, திலீப் சுப்பராயன் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றுகிறார். ஜெய், அஞ்சலி மீண்டும் இணைந்து நடிப்பது குறித்த தகவல்களை, இன்று அஞ்சலியின் பிறந்த நாளையொட்டி வெளியிட்டுள்ளனர் இப்படக் குழுவினர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு வாய்த்த அடிமைகள் - டீசர்


;