கன்னடத்துக்குப் போகும் ‘மெட்ரோ’

ரிலீசுக்கு முன்னதாகவே கன்னட உரிமை விற்கப்பட்ட தமிழ் படம்!

செய்திகள் 16-Jun-2016 2:40 PM IST VRC கருத்துக்கள்

அறிமுகம் சிரிஷ், மாயா, பாபி சிம்ஹா, சென்ட்ராயன், யோகிபாபு முதலானோர் நடித்திருக்கும் படம் ‘மெட்ரோ’. ‘ஆள்’ படத்தை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணன் இயக்கியிருக்கும் இப்படம் வருகிற 24 ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் சிட்டியில் நடக்கும் செயின் பறிப்பையும், தங்க கடத்தலையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆட்சேபத்திற்குரிய நிறைய காட்சிகள் இருப்பதாக கூறி முதலில் இப்படத்திற்கு சென்சாரில் அனுமதி வழங்கவில்லை! பிறகு ரிவைசிங் கமிட்டிக்கு போன இப்படம் சில விவாதங்களுக்கு பிறகு ‘ஏ’ சர்டிஃபிக்கெட்டுடன் வெளியிட அனுமதி வழங்கியிருக்கிறார்கள். இது குறித்து இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் கூறும்போது,

‘‘செயின் பறிப்பு, தங்க கடத்தல் போன்ற விஷயங்களை சொல்லும்போது அது சம்பந்தப்பட்டு சில வன்முறை காட்சிகளை வைக்க வேண்டியது படத்தின் கதைக்கு அவசியம்! அந்த வகையிலேயே இப்படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. செயின் பறிப்பவர்கள் எப்படியெல்லாம் திட்டம் போட்டு வருவார்கள் அதிலிருந்து பெண்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள எத்தகைய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் போன்ற மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களையும் இப்படத்தில் சொல்லியுள்ளோம். எதுவாயினும் சென்சாரின் சட்ட விதிகளுக்கு நாங்கள் மதிப்பளித்து ‘ஏ’ சர்டிஃபிக்கெட்டை பெற்றுக் கொண்டோம். ஆனால் இப்படம் வன்முறையை வலியுறுத்தும் படம் என்றோ, பாலியல் காட்சிகள் இடம்பெறும் படம் என்றோ யாரும் நினைக்க வேண்டாம்! குடும்பத்துடன் வந்து பார்க்க கூடிய நல்ல படம் தான். இதை நீங்கள் படத்தை பார்த்த பின்பு உணருவீர்கள்’’ என்றார்.

‘E5 என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் ஜெ. ஜெயகிருஷ்ணனும், ‘மெட்ரோ புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணனும் இணைந்து தயாரித்துள்ள இப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே இப்படத்தின் கன்ண்ட ரீ-மேக் உரிமை விற்கப்பட்டுள்ளது. கன்னட சினிமாவை சேர்ந்த ‘புரொடக்‌ஷன் ஹவுஸ்’ முரளி குரப்பா ‘மெட்ரோ’வின் கன்னட உரிமையை கைபற்றியுள்ளார். தெலுங்கு ரீமேக் உரிமைக்கான பேச்சு வார்த்தைகளும் நடந்து வருவதாக இப்படத்தின் தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உறியடி 2 - டீஸர்


;