லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ‘டார்லிங்’ சாம் ஆண்டன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி நடித்திருக்கும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படம் வெளியாவதற்கு இன்னும் 2 நாட்களே இருக்கின்றன. இப்படத்தைப் பார்க்கத் தூண்டும் காரணங்களில் 5 முக்கிய விஷயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
1. ‘டார்லிங்’ படத்தின் வெற்றி மூலம் ஜி.வி.பிரகாஷுக்கும், இயக்குனர் சாம் ஆண்டனுக்கும் ஏற்கெனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. திகில், காமெடி, பாடல்கள் என அனைத்து ஏரியாக்களிலும் ஸ்கோர் செய்த இப்படத்தின் வெற்றி ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருப்பதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறது.
2. ஜி.வி. நடித்த 2வது படமான ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் டைட்டில் வைக்கப்பட்டதிலிருந்தே பலதரப்பட்ட சர்ச்சைகளை கிளப்பியது. அதோடு படத்திற்கு சென்சாரில் ‘ஏ’வும் வாங்கி ரசிகர்களை ஏங்க வைத்தது. இப்படத்தில் ஜி.வி. - ஆனந்தியின் ஜோடிக்கு ரசிகர்களிடம் உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. இதே ஜோடி இப்போது ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்திலும் இணைந்திருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பும் ஏறியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
3. இப்படத்தின் விளம்பர யுக்தி படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்திருப்பதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும், டீஸரையும் ஏ.ஆர்.ரஹ்மானை வைத்து வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ், படத்தின் பாடல்களை பாலிவுட் பிரபலம் அக்ஷய்குமாரை வைத்து வெளியிட்டார். இதனால் படத்திற்கு பெரிய அளவில் கவனம் கிடைத்தது. அதோடு சமீபத்திய டிவி விளம்பரங்களும் பெரிய அளவில் ‘ரீச்’ ஆகி உள்ளன.
4. முழுக்க முழுக்க இளைஞர்களை குறிவைத்தே இப்படத்தின் மொத்த பாடல்களையும் உருவாக்கியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். பாடல்கள் யூத்களிடம் ‘லைக்ஸை’ அள்ளியிருக்கின்றன. குறிப்பாக, ‘கண்ணை நம்பாதே...’ பாடல் சூப்பர்ஹிட் ரகமாக அமைந்துள்ளது.
5. ‘பாட்ஷா’ படத்தின் மாஸ் டயலாக்கை இப்படத்தின் தலைப்பாக வைத்திருந்தாலும், 100% காமெடிக்கு உத்தரவாதம் என்கிறது ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படக்குழு. டீஸர், டிரைலர்களில் இது அப்பட்டமாகத் தெரிந்தது. விடிவி கணேஷ், நான்கடவுள் ராஜேந்திரன் ஆகியோரோடு இணைந்து ஜி.வி.பிரகாஷும் காமெடியில் வெளுத்து வாங்கியிருக்கிறாராம்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வரும் படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கி...
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் பாடல் ஒன்ற சமீபத்தில்...
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு...