கே.எஸ்.ரவிகுமாரின் ‘முடிஞ்சா இவன புடி’ புதிய தகவல்கள்!

கே.எஸ்.ரவிகுமாரின் ‘முடிஞ்சா இவன புடி’ இசை எப்போது?

செய்திகள் 15-Jun-2016 3:11 PM IST VRC கருத்துக்கள்

‘லிங்கா’வை தொடர்ந்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படம் ‘முடிஞ்சா இவன புடி’. ‘ராம்பாபு புரொக்‌ஷன்ஸ்’ சார்பில் எம்.பி.ராம் பாபு தயாரிக்கும் இப்படத்தில் சுதீப் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நித்யா மேனன் நடிக்கிறார். வில்லனாக ‘போக்கிரி’, ‘பூஜை’ ஆகிய படங்களில் நடித்த முகேஷ் திவாரி நடிக்கிறார். இன்னொரு வில்லனாக ‘எதிர்நீச்சல்’, ‘பாண்டியநாடு’ படங்களில் நடித்த சரத் லோகித்சுவா நடிக்கிறார். இவர்களுடன் நாசர், சாய் ரவி அச்சுதா குமார், லதா ராவ், சதீஷ், சாது கோகிலா, கௌதமி மற்றும் பலர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் பாடல்களை இம்மாத இறுதியிலும், படத்தை ஜூலை மாதமும் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். ‘நான் ஈ’, ‘புலி’ ஆகிய படங்களில் நடித்த சுதீப் கதாநாயகனாக நடிக்கும் நேரடி தமிழ் படம் இது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;