‘ரம்’ பட தலைப்புக்கு புது விளக்கம்!

‘ரம்’ என்றால் என்ன? புது விளக்கம்!

செய்திகள் 15-Jun-2016 2:49 PM IST VRC கருத்துக்கள்

‘வேலையில்லா பாட்டதாரி’ பட புகழ் ரிஷிகேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ரம்’. அறிமுக இயக்குனர் சாய் பரத் இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் விவேக், ‘அஞ்சாதே’ நரேன், மியா ஜியார்ஜ், அம்ஜத் முதலானோரும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் தலைப்பு குறித்து புது விளக்கம் தந்திருக்கிறார் இயக்குனர் சாய் பரத்! அவர் ‘ரம்’ படத்தைலைப்பு குறித்து கூறும்போது, ‘‘இந்த படத்தை பொறுத்த வரையில் ‘ரம்’ என்றால் மதுபானம் என்று அர்த்தம் கிடையாது. பழங்காலத்து வார்த்தையான ‘ரம்’ என்ற சொல்லுக்கு ‘தீர்ப்பு’ என்பதே பொருள்! சமீபகாலமாக தமிழ் சினிமாவில் திகில் படங்கள் நிறைய வருகின்றன. ஆனால் அந்த படங்கள் போல் இல்லாமல் எங்கள் ‘ரம்’ முற்றிலும் மாறுபட்ட திகில் படமாக இருக்கும்’’ என்றார். இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்க, விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் இறுதிகட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;