‘எதிர்நீச்சல்’ நடிகையுடன் மா.கா.பா. இணையும் ‘மாணிக்

மா.கா.பா. ஆனந்துடன் இணையும் ‘எதிர்நீச்சல்’ நடிகை!

செய்திகள் 15-Jun-2016 11:07 AM IST VRC கருத்துக்கள்

‘வானவராயன் வல்லவராயன்’, ‘நவரசத்திலகம்’, ’அட்டி’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கும் மா.கா.பா. ஆனந்த் அடுத்து நடிக்கும் படத்திற்கு ‘மாணிக்’ என்று பெயர் வைத்துள்ளனர். ‘மோஹிதா சினி டாக்கீஸ்’ சார்பில் எம்.சுப்பிரமணியம், வினோத் இருவரும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் மா.கா.பா.ஆனந்துடன் ‘எதிர்நீச்சல்’ படத்தில் நடித்த சூசா குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் மார்ட்டின். எம்.ஆர்.பழனிகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ‘போடா போடி’ புகழ் தரண் குமார் இசை அமைக்கிறார். இப்படத்தின் பூஜை நாளை காலை 8 மணிக்கு ஏவி.எம்.பிள்ளையார் கோயிலில் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பஞ்சுமிட்டாய் - டிரைலர்


;