விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடியும் தருவாயில் இருக்கிறது. தெலுங்கில் ‘அபிநேத்ரி’ என்ற பெயரிலும் ஹிந்தியில் ‘டெவில்’ என்ற பெயரிலும் வெளியாகவிருக்கும் இப்படத்தில் சோனு சூட்டும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பிரபுதேவா ஸ்டுடியோஸ் மற்றும் பாப் கார்ன் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் டீஸர் நாளை மறுநாள் (ஜூன்-17) வெளியாகவிருக்கிறது. ஒரு இடைவெளிக்கு பிறகு பிரபுதேவா நடிக்கும் படம், பிரபுதேவா, விஜய், தமன்னா முதலானோர் இணையும் முதல் படம் என பல சிறப்புக்களுடன் உருவாகி வரும் இப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேமிசந்த் ஜபக் தயாரிக்க அறிமுக இயக்குனர் A.C.முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபு தேவா நடிக்கும் படம்...
இயக்குனர் ஷங்கரிடம் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம்...
இயக்குனர் ஷங்கரிடம் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம்...