வேற்றுகிரகவாசிகளின் தாக்குதலில் மீண்டும் அமெரிக்கா?

‘இன்டிபென்டஸ் டே’ படத்தின் 2ஆம் பாகம் ‘இன்டிமென்டஸ் டே : ரிசர்ஜென்ஸ்’ இம்மாதம் 24ஆம் தேதி வெளியாகவிருக்கிறது

செய்திகள் 15-Jun-2016 10:53 AM IST Chandru கருத்துக்கள்

ரோலன்ட் எமெரிச் இயக்கத்தில் பிரம்மாண்டாக உருவாகி 1996ஆம் ஆண்டு உலகமெங்கும் வெளியான படம் ‘இன்டிபென்டென்ஸ் டே’. ஏலியன்ஸ் பாதிப்பால் அமெரிக்கா சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் பல ஆயிரம் கோடி ரூபாயை வசூல் செய்தது. இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும்கூட இப்படத்திற்கு அந்தக்காலத்திலேயே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

சரியாக 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஏலியன்ஸ் தாக்குதலை சந்திக்கவிருக்கிறது அமெரிக்கா. ஆம்... ‘இன்டிபென்டஸ் டே’ படத்தின் 2ஆம் பாகமாக ‘இன்டிமென்டஸ் டே : ரிசர்ஜென்ஸ்’ என்ற ஹாலிவுட் படம் இம்மாதம் 24ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. 200 மில்லியன் அமெரிக்க டாலர் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில் பில் புல்மேன், ஜெஃப் கேல்டுப்ளம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். முதல் பாகத்திலும் நடித்த இவர்களுடன் லியம் ஹெம்ஸ்வொர்த், ஜுட் ஹிர்ஸ்ச் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஹெரால்டு க்ளோசர், தாமஸ் வான்கர் இணைந்து இசையமைத்துள்ள இப்படத்திற்கு மார்கஸ் ஃபோர்டெரர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தமிழிலும் உருவாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;