செஞ்சுரி அடித்த ‘எந்திரன் 2’ டீம்!

கடந்த 6 மாதமாக நடைபெற்று வரும் ‘எந்திரன் 2’ படம் தற்போது 100வது நாள் படப்பிடிப்பை எட்டியிருக்கிறது

செய்திகள் 15-Jun-2016 10:08 AM IST Chandru கருத்துக்கள்

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடிக்கும் ‘எந்திரன்’ படத்தின் 2ஆம் பாகமான ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி துவங்கியது. லைக்கா புரொடக்ஷன் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, எடிட்டிங் செய்கிறார் ஆண்டனி. ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கும் இப்படத்தில் அக்ஷய்குமார் படத்தின் வில்லனாக நடிக்கிறார்.

டிசம்பரில் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது 100வது நாள் படப்பிடிப்பை எட்டியிருக்கிறது. இதில் டெல்லி நேரு ஸ்டேடியத்தில் ‘2.0’ படத்தின் க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சி உட்பட படத்தின் முக்கிய ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாம். தற்போது 50% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக இயக்குனர் ஷங்கர் ட்வீட் செய்திருக்கிறார். ஹாலிவுட் சண்டை இயக்குனர் கென்னி பேட்ஸ் இப்படத்திற்கு ஆக்ஷன் காட்சிகளை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;