சீன திரைப்பட விழாவில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் ‘அருவி’

சீன திரைப்பட விழாவில் அருவி!

செய்திகள் 14-Jun-2016 4:20 PM IST VRC கருத்துக்கள்

கார்த்தி நடிக்கும் பிரம்மாண்ட படைப்பான ‘காஷ்மோரா’ படத்தை தொடர்ந்து ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள திரைப்படம் ‘அருவி’. இப்படத்தை அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ளார். இசையை பிந்து மாலினி, வேதாந்த் பரத்வாஜ் அமைத்திருக்கிறார்கள். குட்டி ரேவதி பாடல்கள் எழுதியுள்ளார். ஒளிப்பதிவை ஷெல்லி காலிஸ்ட் கவனித்துள்ளார். படத்தொகுப்பை ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா கவனித்துள்ளார். இந்தன் படம் டெல்லியில் நடைபெற்ற ‘ Habitat Film Festival’ லில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படம் தற்போது சீனாவில் நடந்து வருகிற ‘ஷாங்காய் உலகத் திரைப்பட விழாவில்’ இன்று இரவு 8 மணி அளவில் திரையிடப்படவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கைதி ட்ரைலர்


;