டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை படமாகிறது!

தமிழில் திரைப்படமாகும் டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு!

செய்திகள் 14-Jun-2016 12:02 PM IST VRC கருத்துக்கள்

டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கையை மையமாக வைத்து ‘பாபா சாகேப்’ என்ற பெயரில் தமிழில் ஒரு படம் உருவாகிறது. ‘RUN HORSE MEDIA’ என்ற நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்கும் அஜய்குமார் படம் குறித்து கூறும்போது, ‘‘அம்பேத்கர் வாழ்கையை மையகருவாக வைத்து எடுக்கப்படும் படம் ‘பாபா சாகேப்’. இது ஜாதி தலைவர் சம்பந்தப்பட்ட படம் அல்ல, தேசத் தலைவரின் படம். தமிழ் சினிமாவில் இப்போது பெரும்பாலும் ரௌடிகள் பற்றிய கதை தான் வருகிறது. நாம் ஏன் ஒரு தேச தலைவரின் வாழ்கையை அடிப்படையாக கொண்டு ஒரு திரைப்படம் உருவாக்க கூடாது என்ற எண்ணத்தில்தான் இத்திரைப்படத்தை துவங்கியிருக்கிறோம். ஹாலிவுட்டில் அட்டன்பிரோ என்ற இயக்குநர் காந்தியின் வாழ்கையை திரைப்படமாக எடுக்கும்போது, தமிழனாகிய நான் ஏன் ஒரு தேச தலைவரின் வாழ்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்ககூடாது என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்த ‘பாபா சாகேப்’ திரைப்படம்! அம்பேத்கர் உருவம் கொண்ட ஒருவருக்காக சுமார் 10,000 பேருக்கு மேல் தேர்வு நடத்தினோம், கிடைக்கவில்லை. இறுதியாக எங்கள் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் மோகன் ‘ஆய்வுக்கூடம்’ திரைப்படத்தின் நாயகன் ராஜ கணபதியை அறிமுகம் செய்தார். அவர் தோற்றத்தில் பாபா சாகேப் போல உள்ளதால் அவரை தேர்வு செய்தோம். மேலும் அம்பேத்கரின் குழந்தை தோற்றத்திற்கும், பாரதியார், பெரியார் போன்ற தலைவர்களுக்கான தேர்வும் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு தேவா இசை அமைக்கவிருக்கிறார். கலை இயக்கத்தை மணி வர்மா கவனிக்கிறார். இதர நடிகர் நடிகைகளின் தேர்வு முடிந்ததும் படப்பிடிப்பு ஆரம்பமாகும்’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;