‘சார்லி’ ரீமேக்கை தயாரிக்கும் பிரபல பாலிவுட் நிறுவனம்!

‘சார்லி’ மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அப்படத்தை பிரமோத் ஃபிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாக அறிவிப்பு

செய்திகள் 14-Jun-2016 11:08 AM IST Chandru கருத்துக்கள்

‘இறுதிசுற்று’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழில் நடிப்பதற்கு பல்வேறு கதைகளை கேட்டு வந்தார் நடிகர் மாதவன். அதில், ‘சார்லி’ மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கும் ஒன்று. விஜய் இயக்கத்தில் மாதவன் நடிக்கவிருப்பதாக முடிவு செய்யப்பட்டிருக்கும் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது அப்படத்தை, பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான பிரமோத் ஃபிலிம்ஸ் தயாரிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனத் தெரிகிறது.

இயக்குனர் விஜய் தற்போது பிரபுதேவா, தமன்னா, சோனு சூட் நடிக்கும் படமொன்றை இயக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் புதிய படம் ஒன்றையும் இயக்கவிருக்கிறார். இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு மாதவனை வைத்து ‘சார்லி’ ரீமேக்கை இயக்கவிருக்கிறாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;