‘ரெமோ’வுக்கு புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜூன் 9ஆம் தேதியே வெளியாக வேண்டிய ‘ரெமோ’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டிற்கு தற்போது புதிய தேதி, நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது

செய்திகள் 14-Jun-2016 10:48 AM IST Chandru கருத்துக்கள்

24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகி வரும் ‘ரெமோ’ படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்க, சிவகார்த்திகேயன் வித்தியாசமான 3 தோற்றங்களில் நடித்து வருகிறார். ‘ரஜினி முருகன்’ படத்தைத் தொடர்ந்து ‘ரெமோ’விலும் கீர்த்தி சுரேஷே நாயகியாக நடித்து வருகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு, அனிருத் இசை என படத்தின் பாசிட்டிவ் பக்கங்கள் ஏராளம்.

‘ரெமோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டைட்டில் மியூசிக் ஆகியவற்றை கடந்த 9ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், அந்த சமயத்தில் ‘கபாலி’ படத்தின் பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டதால், ‘ரெமோ’ ரிலீஸை தள்ளி வைத்தார்கள். இந்நிலையில், ஜூன் 23ஆம் தேதி மாலை 6 மணி அளவில் ‘ரெமோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட், டைட்டில் மியூசிக் ஆகியவற்றின் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறும் என படத்தின் தயாரிப்பாளர் ஆ.டி.ராஜா அறிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

Mr லோக்கல் டீஸர்


;