30 கோடி பட்ஜெட்டில் ‘பாகுபலி 2’ க்ளைமேக்ஸ்?

‘பாகுபலி’ வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ஆம் பாகத்தை இயக்கிக் கொண்டிருக்கும் எஸ்.எஸ்.ராஜமௌலி படம் குறித்த புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்

செய்திகள் 14-Jun-2016 10:30 AM IST Chandru கருத்துக்கள்

இந்தியாவில் மட்டுமே கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் வசூலைக் குவித்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் வாய்பிளக்க வைத்த ‘பாகுபலி’ படத்தின் 2ஆம் பாகம் ‘பாகுபலி : தி கன்குளுசன்’ படம் படப்பிடிப்பில் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. 50% மேல் படப்பிடிப்பு முடிவுபெற்றிருக்கும் ‘பாகுபலி 2’ படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நேற்றுமுதல் ஆரம்பமாகியுள்ளது. கிட்டத்தட்ட 10 வாரங்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறாராம் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இந்த 70 நாட்களில் பிரம்மாண்ட போர்க்காட்சிகள் படமாக்கப்படவிருக்கிறதாம். இந்த படப்பிடிப்பிற்காக சண்டை காட்சிகளுக்கான பயற்சி, ஒத்திகை, செட்களுக்கான வேலை, கிராபிக்ஸ் பணிகளுக்கான திட்டங்கள் என கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக கடுமையாக உழைத்திருக்கிறது ராஜமௌலி டீம். படப்பிடிப்பு துவங்கியுள்ளதையும், அதற்காக எப்படி தாங்கள் திட்டமிட்டு உழைக்கிறோம் என்பது குறித்தும் இயக்குனர் ராஜமௌலி தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல்களை பகிர்ந்துள்ளார்.

முதல் பாகத்தில் காட்டப்பட்ட போர்க்காட்சிகளைவிட இந்த 2ஆம் பாகத்தின் போர்க்காட்சிகள் ரசிகர்களை வியக்க வைக்கும் அளவுக்கு பிரம்மாண்டமாகவும், விறுவிறுப்பான யுக்திகளுடனும் படமாக்கப்படவிருக்கிறதாம். இந்த போர்க்காட்சிகளுக்கான செலவு மட்டுமே 30 கோடி ரூபாய்க்கும் மேல் (பாகுபலி போர்க்காட்சிகளுக்கான செலவு 15 கோடி ரூபாயாம்) இருக்கும் என்கிறார்கள். இந்த போர்க்காட்சிகளில் நடிப்பதற்காக நடிகை தமன்னா சமீபத்தில் குதிரைப் பயிற்சி மேற்கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சாஹோ டீஸர்


;