விமலுடன் ஜோடி சேரும் ஆனந்தி!

விமலும், ஆனந்தியும் முதன் முதலாக இணையும் படம்!

செய்திகள் 14-Jun-2016 10:22 AM IST VRC கருத்துக்கள்

பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘மன்னர் வகையறா’. விரைவில் வெளியாகவிருக்கும் ‘அட்ரா மச்சான் விசிலு’ படத்தை தயாரித்துள்ள ‘அரசு ஃபிலிம்ஸ்’ தயாரிக்கும் இப்படத்திற்கான கதாநாயகி தேர்வு நடந்து வந்தது. இப்போது கதாநாயகியாக ‘கயல்’ ஆனந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்படம் சம்பந்தப்பட்ட தகவல்கள் ஏற்கெனவே வெளியாகியிருந்தன! ஆனால் இப்படத்தில் யார் கதாநாயகியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகாமல் இருந்தது! விமலும், ஆனந்தியும் முதன் முதலாக ஜோடி சேரும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 20-ஆம் தேதி சென்னையில் துவங்கவிருக்கிறது. நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு பிஜி.முத்தயா ஒளிப்பதிவு செய்கிறார். ஜாக்ஸ் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடவுள் இருக்கான் குமாரு - கும் சாரே பாடல் வீடியோ


;