நடிகர் சங்கத்திற்கு காரை நன்கொடையாக்கிய நடிகர் விக்ராந்த்!

நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் பரிசுபெற்ற 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள காரை நன்கொடையாக வழங்கியுள்ளார் விக்ராந்த்

செய்திகள் 13-Jun-2016 11:26 AM IST Chandru கருத்துக்கள்

நடிகர் சங்கத் தலைவராக நாசர் பொறுப்பேற்றபிறகு நிறைய நல்ல மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. நடிகர் சங்கத்தின் இடத்தை மீட்டதோடு, அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான நிதி திரட்டும் வேலைகளிலும் நடிகர் சங்கம் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்னிந்திய நட்சத்திரங்கள் பங்குபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டி சமீபத்தில் நடத்தப்பட்டது. இதன்மூலம் கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் நடிகர் சங்கத்திற்கு வருமானம் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நட்சத்திர கிரிக்கெட்டில் அருமையாக விளையாடி, சிறந்த வீரர் விருதை வென்ற நடிகர் விக்ராந்திற்கு கார் பரிசளிக்கப்பட்டது. தற்போது அவர் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள டாடா டியாகோ காரை, நடிகர் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார் விக்ராந்த். அவரின் இந்த நல்ல நோக்கத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார் நடிகர் சங்க செயலாளர் விஷால்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;