பரிசளிப்பு விழாவில் சிவகுமார், சூர்யா, கார்த்தி நெகிழ்ச்சிப் பேச்சு!

சிவகுமார் கல்வி அறக்கட்டளை 37-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா!

செய்திகள் 13-Jun-2016 10:01 AM IST VRC கருத்துக்கள்

நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 36 ஆண்டுகளாக ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெணக்ள் எடுத்த மணவரக்ளை தேர்ந்தெடுத்து பரிசளித்து, பாரட்டி, கௌரவித்து வருகிறார். இந்த ஆண்டுக்காண பரிசளிப்பு விழா நேற்று காலை சென்னையிலுள்ள பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் 20 மாணவ மாணவிகளுக்கு தலா 10,000 வீதம் மொத்தம் 2 லட்சம் பரிசளிக்கப்பட்டது. விழாவில் வரவேற்புரை நிகழ்த்திய நடிகர் கார்த்தி,
‘‘இது எங்கள் குடும்ப விழா! ‘நல்ல செயல்களை செய்’ என்று அப்பாவும் அம்மாவும் அறிவுரை மட்டும் கூறாமல் எப்படி நல்ல காரியங்களில் ஈடுபட வேண்டும் என்பதையும் எங்கள் கண் முன்னால் செய்து காட்டினார்கள். ஒவ்வொரு வருடமும் எங்கள் வீட்டு நிகழ்ச்சியாகவே சிவகுமார் கல்வி அறக்கட்டளை நிகழ்ச்சி நடக்கும். பரிசுபெற்ற மாணவர்கள் நன்றாக படிப்பவர்கள். அவர்களிடம் ‘நல்லா படிங்க’ என்று சொல்வதை விட படித்த படிப்பை சமூகத்திற்கு பயன்படுத்தும் படி கேட்டுகொள்கிறேன்’’ என்று கூறினார்.

அதனை தொடர்ந்து நடிகர் சிவகுமார் பேசும்போது, ‘’33 ஆண்டுகள் என் பொறுப்பில் இயங்கிய அறக்கட்டளையை அதற்கு பிறகு அகரம் ஃபவுண்டேஷன் பொறுப்பேற்று சிறப்பாக கல்வி பணி செய்து வருகிறது. சிறிய அளவில் ஏழை மாணவர்களுக்கு செய்த உதவியை இப்போது என்னுடைய பிள்ளைகள் நல்ல முறையில் செய்து வருகிறார்கள். கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்தவர்கள் படிக்க் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். கல்வி ஒருவரின் வாழ்க்கை தரத்தை எந்தளவு உயர்த்தும் என்பதையும் நான் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். அப்துல்கலாம், மயில் சாமி அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கஷ்டப்பட்டு படித்து வாழ்க்கையில் சாதித்து இருக்கிறார்கள். அவர்களை போல ஒவ்வொரு மாணவனும், மாணவியும் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். புகை, மது போன்றவற்றை தவிர்த்து விடுங்கள். ஒழுக்கத்துடன் வாழுங்கள். அறிவை மேம்படுத்துங்கள். அறிவும், ஒழுக்கமும் இருந்தால் நீங்கள் உலகின் எந்த மூலைக்கு சென்றும் சாதனை படைக்கலாம்’’ என்றார்.

‘அகரம் ஃபவுண்டேஷன்\ நிறுவனர் சூர்யா பேசும்போது, ‘‘கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு’’ என்று சொல்லுவாங்க. 37 வருடமாக நடக்கும் இந்த நிகழ்வு அதற்கு ஒரு உதாரணம். அகரம் ஃபவுண்டேஷன் நம் சமூகத்தில் இருக்கும் அடித்தட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்கு தன்னால் முடிந்த பணிகளை செய்து வருகிறது. 1300-க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்லூரி கனவை பல நல்ல உள்ளம் படைத்தவர்களின் உதவியோடு நனவாக்கி இருக்கிறோம். உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்று அடிப்படை தேவைகளோடு கல்வியும் சேர்ந்து விட்ட ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். கடந்த ஆண்டு முதல் ‘தை’ திட்டத்தின் மூலம் படிப்புக்கு மட்டுமின்றி தொழில் கல்விக்கு முன்னுரிமை தரும் வகையில் பள்ளி கல்வியை இடைநின்ற மாணவர்களுக்கு பல்வேறு தொழில் நிறுவனங்கள் ஒத்துழைப்போடு 40 மாணவர்களுகு தொழில் கல்வி அளிக்கிறோம். அதைப் போல அகரம் கல்வி அறக்கட்டளை ‘விதை’ திட்டத்தின் கீழ் பண உதவி மட்டுமின்றி மாணவர்கள் நம் சமூகத்தை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள தேவையான பல்வேறு பயிற்சிகளும் சிறந்த நிபுணர்களின் உதவியோடு அளித்து வருகிறது. ஒவ்வொருவரும் ஏழை குழந்தைகள் கல்விக்கு உதவ வேண்டும். கல்வி தான் வாழ்க்கை தரத்தை உயர்த்தும். எனவே எல்லா மாணவர்களும் வைராக்கியத்தோடு படித்து உயர்ந்த இடத்துக்கு வரவேண்டும்’’ என்றார்.

விழா இறுதியில் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு நன்றி உரை ஆற்றினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;