மீண்டும் நடிப்பில் களமிறங்கும் நெப்போலியன்!

புது பொலிவுடன், கம்பீரத்துடன் மீண்டும் நெப்போலியன்!

செய்திகள் 13-Jun-2016 10:04 AM IST VRC கருத்துக்கள்

ஏற்கெனவே பல படங்களில் நடித்திருக்கும் நெப்போலியன் அரசியலில் நுழைந்த பிறகு திரைப் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். ஒரு இடைவெளிக்கு பிறகு இப்போது நெப்பொலியன் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். பாபி சிம்ஹா தயாரித்து நடிக்கும் ‘வல்லவனுக்கு வல்லவன்’, சசிக்குமார் தயாரித்து நடிக்கும் ‘கிடாரி’, குளோபல் மீடியா ஒர்க்ஸ் சார்பில் டி.விஜய்பிரகாஷ் தயாரிக்க, ராஜதுரை இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத படம், இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய நரசிம்மராவ் இயக்கத்தில் ‘சரபா’ என்ற தெலுங்கு படம் என பல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறார் நெப்போலியன்! புது பொலிவுடனும், கம்பீரத்துடனும் மீண்டும் நடிக்க வந்துள்ள நெப்பொலியனுக்கு ரசிகர்களின் ஆதரவு நிச்சயம் இருக்கும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - டிரைலர்


;