பிரம்மாண்ட பங்களா செட்டில் ‘ரம்’ படப்பிடிப்பு!

‘ரம்’முக்காக பெரிய பங்களா செட்!

செய்திகள் 11-Jun-2016 4:43 PM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் சாய் பரத் இயக்கி வரும் படம் ‘ரம்’. ‘வேலையில்லா பட்டதாரி’ படப் புகழ் ரிஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி, விவேக், ‘அஞ்சாதே’ நரேன், மியா ஜியார்ஜ், அம்ஜத் முதலானோர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை அம்பத்தூரில் மிகப் பெரிய பங்களா செட் ஒன்று அமைத்து ‘ரம்’மின் காட்சிகளை அதில் படமாக்கி வருகின்றனர். ‘‘படத்தின் கதைப்படி இது போன்ற ஒரு பங்களா தேவைப்பட்டது! ஆனால் சென்னை முழுக்க தேடியும் கிடைக்கவில்லை. அதனால் அது மாதிரி ஒரு பங்களாவை செட் போட்டு எடுக்கலாம் என்ற யோசனைக்கு தயாரிப்பு தரப்பினரும் முழு ஒத்துழைப்பு தந்தார்கள். அப்படி உருவானது தான் இந்த செட். பங்களா செட்டை பார்த்து பல சினிமா பிரபலங்கள் பாராட்டினார்கள். இது ‘ரம்’மிற்கு கிடைத்த முதல் வெற்றி’’ என்கிறார் இயக்குனர் சாய் பரத்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;