‘லைக்கா’ தயாரிப்பில் இணையும் விஜய், மாதவன்!

விஜய் இயக்கத்தில் மாதவன், பார்வதி இணையும் படம்!

செய்திகள் 11-Jun-2016 1:03 PM IST VRC கருத்துக்கள்

துல்கர் சல்மான், பார்வதி நடித்து மலையாளத்தில் பெரும் வெற்றிப் பெற்ற படம் ‘சார்லி’. இப்படத்தின் தமிழ் ரீ-மேக் உரிமையை கைபற்றுவதில் பலத்த போட்டி நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது ரஜினிகாந்தின் ‘2.0’ படம் உட்பட பல திரைப் படங்களை தயாரித்து வரும் ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் ’சார்லி’யின் தமிழ் ரீ-மேக் உரிமையை கைபற்றியுள்ளது என்றும், அதனை இயக்கும் பொறுப்பை விஜய்யிடம் வழகப்பட்டுள்ளது என்றும் நம்பக் கூடிய தரப்பிலிருந்து தகவல் கிடைத்துள்ளது. ‘இறுதிசுற்று’ படத்தை தொடர்ந்து நல்ல கதைகளை தேடி வந்த மாதவனுக்கு ‘சார்லி’யில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ’சார்லி’யில் கதாநாயகியாக நடித்த பார்வதியே தமிழ் ‘சார்லி’யிலும் கதாநாயகியாக நடிக்க இருக்கிறாராம். விஜய், மாதவன், பார்வதி முதன் முதலாக இணையும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு (2017) துவக்கத்தில் தான் ஆரம்பமாகுமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;