‘சைமா’ விழாவில் சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ சிங்கிள் டிராக்!

சிங்கப்பூரில் ‘ரெமோ’ சிங்கிள் டிராக் வெளியீடு!

செய்திகள் 11-Jun-2016 11:53 AM IST VRC கருத்துக்கள்

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA) வழங்கும் விழா ஜூன்-30 மற்றும் ஜூலை-1 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் சிங்கப்பூரிலுள்ள சன்டெக் கன்வென்ஷன் சென்டரில் நடக்கவிருக்கிறது. இவ்விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘ரெமோ’ படத்தில் இடம் பெறும், ‘செஞ்சிட்டாளே…’ என்ற சிங்கிள் டிராக்கை வெளியிடவிருக்கிறார்கள். ‘ரெமோ’ படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன், இசை அமைப்பாளர் அனிருத் உட்பட பலர் இவ்விழாவில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும் ‘ரெமோ’வின் படப்பிடிப்புகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ‘24 ஏஎம் ஸ்டுடியோஸ்’ நிறுவன தயாரிப்பான ‘ரெமோ’வை விநாயக சதுர்த்தியை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;