சிபி சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் படம்

‘கட்டப்பாவை காணோம்’ புதிய தகவல்கள்!

செய்திகள் 11-Jun-2016 10:57 AM IST VRC கருத்துக்கள்

‘ஜாக்சன் துரை’ பட வெளியீட்டு சம்பந்தமான வேலைகளில் பிசியாக இயங்கி வரும் சிபி சத்யராஜ் அடுத்து ‘கட்டப்பாவை காணோம்’ என்ற படத்தில் நடிக்கிறார் என்ற தகவலை நேற்று வெளியிட்டிருந்தோம். இப்படத்தை இயக்குனர் அறிவழகனின் உதவியாளர் மணி செய்யோன் இயக்குகிறார். இப்படத்தில் சிபிராஜுடன் யார் யார் நடிக்கிறார்கள்? இப்படத்தை தயாரிக்கும் நிறுவனம் ஏது? என்பது போன்ற தகவல்கள் கிடைத்துள்ளது!

‘கட்டப்பாவை காணோம்’ படட்த்தை ‘வின்ட் சைம்ஸ் மீடியா என்டர்டெயின்மென்ட்’ என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் சிபி சத்யராஜுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இவர்களுடன் சாந்தினி, காளி வெங்கட், ‘யோகி’ பாபு, மைம் கோபி, லிவிங்ஸ்டன், திருமுருகன், ஜெய்குமார் ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் நலன் குமாரசாமியும் நடிக்கிறார். ‘இனிமே இப்படித்தான்’ பட புக்ழ சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார். ‘நவீன சரஸ்வதி சபதம்’ பட புகழ் ஆனந்த் ஜீவா ஒளிப்பதிவு செய்கிறார். ‘இறுதிச்சுற்று’ படப் புகழ் சதீஷ் சூர்யா படத்தொகுப்பாளராகவும், லக்ஷ்மி தேவ் கலை இயக்குனராகவும் பணியற்றுகின்றனர். மீனை முக்கிய கதாபாத்திரமாக வைத்து எடுக்கப்பட்ட ஹாலிவுட் படம் ‘ஃபைண்டிங் நீமோ’. குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட இப்படம் அனைவரையும் கவர்ந்து வெற்றிகரமாக ஓடியாது. அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் முதன் முதலாக மீனை முக்கிய பாத்திரமாக வைத்து எடுக்கப்படும் படம் ‘கட்டப்பாவை காணோம்’. இந்த தகவல்களை தயாரிப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரங்கா டீஸர்


;