நடிகர் சந்தானம் தந்தை நீலமேகம் காலமானார்!

சந்தானத்தின் தந்தை காலமானார்!

செய்திகள் 11-Jun-2016 10:28 AM IST VRC கருத்துக்கள்

நடிகர் சந்தானத்தின் தந்தை நீலமேகம். 69 வயதான இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் நேற்று திடீரென்று காலமானார். சென்னை பல்லாவரம் பக்கத்திலுள்ள பொழிச்சல்லுரில் தன் குடும்பத்துடன் வசித்து வந்தார் நீலமேகம்! நேற்று காலமான நீலமேகத்தின் இறுதி சடங்கு இன்று பிற்பகல் பொழிச்சல்லூரில் நடைபெறுகிறது. நம்மை சினிமா மூலம் சிரிக்க வைத்துக்கொண்டிருக்கும் சந்தானத்தை அழவைத்து சென்று விட்ட நீலமேகத்தின் இழப்பு சந்தானம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பேரிழப்பாகும்! தன் அன்பு தந்தையை இழந்து வாடும் சந்தானம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ‘டாப்10 சினிமா’வின் ஆழ்ந்த அனுதாபங்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;