ஜெய், அருள்நிதி நடிப்பில் ‘விஜய்சேதுபதி’ பட தயாரிப்பாளரின் 2 படங்கள்!

ஒரே நேரத்தில் 2 படங்களை தயாரிக்கும் ‘விஜய்சேதுபதி’ தயாரிப்பாளர்!

செய்திகள் 11-Jun-2016 10:11 AM IST VRC கருத்துக்கள்

‘விஜய்சேதுபதி’ படத்தை தயாரித்த ‘வான்சன் மூவீஸ்’ ஷான் சுதர்சன் அடுத்ததாக ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரிக்கிறார். இதில் ஒரு படம் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகவிருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் விவேக் நடிக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை எம்.எஸ்.பிரபுவும், இசையை விஷால் சந்திரசேகரும், கலை இயக்கத்தை கதிரும் மேற்கொள்கிறார்கள். இப்படத்திற்கான கதாநாயகி, மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.

இன்னொரு படத்தை ‘தமிழ்ப் படம்’, ‘ரெண்டாவது படம்’, ‘இனிமே இப்படித்தான்’ மற்றும் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய மகேந்திரன் ராஜாமணி இயக்குகிறார், இந்த படத்தில் ஜெய் கதாநாயக்னாக நடிக்கிறார்,. இவருடன் கருணாகரன், காளி வெங்கட், நவீன், ‘நான் கடவுள் ராஜேந்திரன்’ உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவை மகேஷ் முத்துசுவாமி கவனிக்க, சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார். படத்தொகுப்பை கோபி கிருஷ்ணாவும், கலை இயக்கத்தை வி.சசிகுமாரும் மேற்கொள்கின்றனர்., கதாநாயகி மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புரியாத புதிர் - டிரைலர்


;