கட்டப்பாவை காணோம்!

சிபி சத்யராஜின் ‘கட்டப்பாவை காணோம்’

செய்திகள் 10-Jun-2016 12:29 PM IST VRC கருத்துக்கள்

‘பாகுபலி’ படத்தில் அனைவராலும் பேசப்பட்ட கேரக்டர் சத்யராஜ் எற்று நடித்த கட்டப்பா. இப்போது சத்யராஜின் மகன் சிபி சத்யராஜ் நடிக்கும் ஒரு படத்திற்கு ‘கட்டப்பாவை காணோம்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இந்த படத்தை அறிமுக இயக்குனர் மணி சையோன் இயக்குகிறார். இந்த தலைப்பு வைக்க காரணம் மணி சையோன் உருவாக்கியிருக்கும் கதைக்கும், அதில் ஹீரோவாக நடிக்கும் சிபி சத்யராஜின் கேரக்டருக்கும் இந்த தலைப்பு மிக பொருத்தமாக இருக்கும் என்பதால் தானாம்! ‘பாகுபலி’ பட இன்ஸ்பிரேஷனில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்பட தலைப்பு எந்த வகையிலும் ‘பாகுபலி’ படத்தை அல்லது கட்டப்பா கேரக்டரை கெடுக்கும் விதமாக இருக்காது என்றும் தெரிவித்திருக்கிறார்கள்! சத்யராஜ், சிபி சத்யராஜ் நடிப்பில் விரைவில் ரிலீசாகவிருக்கிற ‘ஜாக்சன் துரை’ திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பிறகு கூட ‘கட்டப்பா ராஜு’ என்று தான் டைட்டில்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரங்கா டீஸர்


;