சமயாலயா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘முப்பரிமாணம்’. இந்த திரைப்படத்திற்காக 27 பிரபல நடிகர், நடிகைகள் பங்குபெற்ற பாடல் காட்சி மிக பிரம்மாண்டமாக அரங்கம் அமைத்து சென்னையில் படமாக்கப்பட்டது. புதிய வருட பிறப்பிற்காக அனைவரும் கலந்து கொண்டாடும் விதமாக பாடமாக்கப்பட்ட இப்பாடல் காட்சியில் ஜாக்கி ஷெராஃப், கே.பாக்யராஜ், பிரபு, பாண்டியராஜன், பார்த்திபன், ராதிகா சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், பூர்ணிமா பாக்யராஜ், விவேக், ஆர்யா, வெங்கட் பிரபு, விஜய் ஆண்டனி, பிரசன்னா, பாபி சிம்ஹா, கலையரசன், சூரி, வித்தார்த், ஆரி, பிரேம்ஜி அமரன், அசோக் செல்வன், சங்கீதா கிரிஷ், ஜஸ்வர்யா ராஜேஷ் , ஜனனி ஐயர், பிரித்வி, கிரிஷ், மொட்டை ராஜேந்திரன், கீர்த்தி சாந்தனு ஆகியோர் பங்கேற்று நடனம் ஆடியுள்ளனர். கபிலன் எழுதிய இப்பாடலுக்கு பிருந்தா நடனம் அமைத்துள்ளார். இயக்குனர் கதிரிடம் ‘காதல் வைரஸ்’ படத்திலும் இயக்குனர் பாலாவிடம் ‘நான் கடவுள்’ படத்திலும் பணியாற்றிய அதிரூபன் ‘முப்பரிமாணம்’ படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார். சாந்தனு கதாநாயகனாகவும், சிருஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் நடிக்கும் இப்படத்தில் தம்பி ராமையா, அப்புக்குட்டி ஆகியோரும் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்க, ஒளிப்பதிவை இராமசாமி கவனிக்கிறார். இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் இப்படத்தின் பாடல்கள் வெளியீடு விழா விரைவில் நடைபெறும் என்று தயாரிப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குனர் சுதர் இயக்கத்தில் ‘கயல்’ சந்திரன், சாதனா டைட்டஸ் இணைந்து நடித்துள்ள படம் ‘திட்டம்...
ஏற்கனவே வெளியாகி வெற்றிபெற்ற பல படங்களின் இரண்டாம் பாங்கள் உருவாகி வரும் நிலையில், பார்த்திபன் தான்...
‘ஆம்பள’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ்த்திரையுலகில் கால் பதித்த ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி,...