விநாயகர் சதுர்த்தி ரிலீஸ் பிளானில் ‘ரெமோ’?

‘காக்கி சட்டை’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ரெமோ’வுக்கு தற்காலிக ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது

செய்திகள் 10-Jun-2016 9:50 AM IST Chandru கருத்துக்கள்

‘24 ஏஎம் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக வளர்ந்துவரும் ‘ரெமோ’ படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். இளைஞர், வயதானவர், பெண் என மூன்று வித்தியாசமான வேடங்களில் சிவகார்த்திகேயன் நடிப்பதாகக் கூறப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறதாம். இரண்டு பாடல் காட்சிகளும், சிற்சில பேட்ஜ் ஒர்க்குகள் மட்டுமே இன்னும் மீதமிருக்கின்றன என்கிறது படக்குழு வட்டாரங்கள். இன்னொருபுறம் அனிருத்தின் இசையமைப்பில் ‘ரெமோ’ படத்திற்கான பாடல்களும் தயாராகவிட்டதாம். பி.சி.ஸ்ரீராம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்தில் கே.எஸ்.ரவிகுமார், ‘ஆடுகளம்’ நரேன், சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் உட்பட பலர் நடிக்கிறார்கள். படத்தில் சின்னச் சின்ன கிராபிக்ஸ் வேலைகளும் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்களாம் ‘ரெமோ’ டீம். விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

Mr லோக்கல் டீஸர்


;