‘யாக்கை’யில் கிருஷ்ணா செய்த சாதனை!

ஒரே நாளில் டப்பிங் பேசி முடித்த கிருஷ்ணா!

செய்திகள் 9-Jun-2016 3:04 PM IST VRC கருத்துக்கள்

‘கழுகு’, ‘யாமிருக்க பயமே’ உட்பட பல படங்களில் நடித்திருக்கும் கிருஷ்ணா நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் ‘யாக்கை’. ‘ஆண்மை தவறேல்’ பட இயக்குனர் குழந்தை வேலன் இயக்கியிருக்கும் இப்படத்தை ‘ப்ரிம் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் முத்துக்குமரன் தயாரிக்கிறார். கிருஷ்ணா, ஸ்வாதி ஜோடியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து இப்போது டப்பிங் வேலைகள் நடைபெற்று வருகின்றன. வழக்கமாக ஹீரோக்கள் ஒரு படத்திற்கு டப்பிங் பேச கிட்டத்தட்ட ஒரு வார காலம் அவகாசம் எடுப்பார்கள்! ஆனால் கிருஷ்ணா தனது வேடத்திற்கான டப்பிங்கை ஒரே நாளில் பேசி முடித்து சாதனை செய்துள்ளார். இதனால் படக்குழுவினர் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்பட்த்தின் ஒரு பாடல் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ள நிலையில், இப்படத்திற்காக நடிகர் தனுஷும் ஒரு பாடலை பாடியிருப்பது ரசிகர்களிடையை மேலும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. டப்பிங் உட்பட போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் ‘யாக்கை’யை விரைவில் திரையில் கண்டு களிக்கலாம் என்கின்றனர் இப்படக் குழுவினர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;