இசையில் புதிய வடிவம் தரும் சத்யா!

நடிகைகளை ஏன் பாட வைக்கவில்லை? இசை அமைப்பாளர் சத்யா விளக்கம்!

செய்திகள் 9-Jun-2016 1:57 PM IST Top 10 கருத்துக்கள்

‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் பிரபலமானவர் இசை அமைப்பாளர் சத்யா! ‘நெடுஞ்சாலை’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘காஞ்சனா-2’ உட்பட பல படங்களுக்கு இசை அமைத்துள்ள சத்யா தனது இசை பயணம் குறித்து கூறியதாவது,

‘‘என்னுடைய அப்பா இசை துறையில் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவரது கனவை நிறைவேற்ற பாடு பட்டேன். சிறு வயதிலே கர்நாடக சங்கீதம் பயின்றேன். கங்கை அமரன், ஏ.ஆர்.ரஹ்மான் என பலரிடம் கீ-போர்டு பிளேயராக பணியாற்றி இருக்கிறேன். பல விளம்பரப் படங்களுக்கு இசையமைத்துள்ளேன். ‘சில்லுன்னு ஒரு காதல்’ கிருஷ்ணா இயக்கிய ‘ஏன் இப்படி மயக்கினாய்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானேன். ஆனால் ஜெய், அஞ்சலி நடித்த ‘எங்கேயும் எப்போதும்’ படம் தான் என்னை பிரபலமாக்கியது. அதை தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் வேலை செய்தேன்,. சமீபத்தில் வெளியான ‘உன்னோடு கா’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ பட பாடல்களின் வெற்றி எனக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக ‘உன்னோடு கா’ படத்தில் என் மகள் வைமித்ரா ஒரு பாட்லை பாடியுள்ளார். ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில், ‘ஆர வல்லி சூர வல்லி…’ என்ற பாடல் மிகவும் பிரபலமாகி உள்ளது. தற்போது ‘ஜெட்லி’, ‘அசுரகுலம்’, இயக்குனர் பார்த்திபனின் அடுத்த படம் உட்பட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறேன். இதுவரை என் இசையில் நடிகைகள் யாரும் பாடியதில்லை. தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே நடிகைகளை பாட வைப்பேன்’’ என்று கூறிய சத்யா, ‘‘ஜெட்லி’ படத்தில் என்னோட பின்னணி இசை புதிய வடிவில் இருக்கும்’’ என்றும் சொன்னார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் - ஐயோ பாவம் பாடல் வீடியோ


;