‘மீகாமன்’ தயாரிப்பாளருடன் இணையும் ‘மிருதன்’ டீம்!

ஜாம்பி படத்தை தொடர்ந்து ஃபேன்டசி படத்தில் நடிக்கவிருக்கிறார் ஜெயம் ரவி!

செய்திகள் 9-Jun-2016 11:35 AM IST VRC கருத்துக்கள்

சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ‘மிருதன்’ படத்தில் நடித்த ‘ஜெயம்’ ரவி மீண்டும் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் ஏற்கெனவே வெளியாகியிருந்தன! இது ஃபேன்டசி ரக படமாம்! ஆனால் இவர்கள் இருவரும் மீண்டும் இணையும் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் யார் என்பது குறித்த விஷயங்கள் வெளியாகாமல் இருந்தது. இப்போது அந்த தகவல் வெளியாகியுள்ளது. ‘மீகாமன்’ படம் உட்பட பல படங்களை தயாரித்த நேமி சந்த் ஜபக் மற்றும் ஹிதேஷ் ஜபக் ஆகியோர் ‘ஜெயம், ரவி நடிக்கும் படத்தை தயாரிக்கவிருக்கிறார்களாம்! தற்போது ‘ரோமியோ ஜூலியட்’ படப் புகழ் லக்‌ஷமன் இயக்கத்தில் ‘போகன்’ படத்தில் நடித்து வரும் ‘ஜெயம்’ ரவி அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஒரு படம், சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாக படங்களை கமிட் செய்து வைத்திருக்கிறார். அதனால் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கும படத்தில் ‘ஜெயம்’ ரவி எப்போது இணைவார் என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வனமகன் - டீசர்


;