டி.ராஜேந்தர் பாணியில் களமிறங்கும் ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி!

ஜி.வி.பிரகாஷை தொடர்ந்து ஹிப் பாப் தமிழா அதியும் ஹீரோவாகிறார்!

செய்திகள் 9-Jun-2016 10:57 AM IST Top 10 கருத்துக்கள்

ஜி.வி.பிரகாஷ் குமாரை தொடர்ந்து இசை அமைப்பாளர் ‘ஹிப் பாப் தமிழா’ ஆதியும் ஹீரோவாகிறார்! ஆதி கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘முறுக்கு மீசை’ என்று பெயரிட்டுள்ளனர். ‘முறுக்கு மீசை’யில் கதாநாயகனாக நடிப்பதோடு இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசை அமைத்து படத்தை இயக்குவதும் ஆதி தானாம். இந்த படத்தை தயாரிக்கும் பொறுப்பை சுந்தர். சி ஏற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து இப்படதின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (ஜூலை) துவங்குமாம். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு, இசை, பாடல்கள் என பன்முகங்களுடன் சினிமாவில் களமிறங்கி வெற்றிகளை குவித்தவர் டி.ராஜேந்தர். இப்போது அவரது பாணியில் ‘முறுக்கு மீசை’ படம் மூலம் ‘ஹிப் பாப் தமிழா’ ஆதியும் களமிறங்கவிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டைட்டில் மோஷன் போஸ்டர்


;