விஜய்சேதுபதி ரூட்டில் ஜி.வி.பிரகாஷ் குமார்!

விஜய்சேதுபதியை போன்று இப்போது ஜி.வி.பிரகாஷ் குமாரும் அதிக படங்களை கையில் வைத்து கொண்டுள்ளார்!

செய்திகள் 9-Jun-2016 10:29 AM IST VRC கருத்துக்கள்

ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வருகிற 17-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிற படம் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’. லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் சாம் ஆண்டன் இயக்கியுள்ள இப்படத்தில் ‘த்ரிஷா இல்லானா நயன்தாரா’ படத்தில் நடித்த ஆனந்தியே இப்படத்திலும் ஜி.வி.க்கு ஜோடியாகியிருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கும் ‘புரூஸ்லீ’, எம்.ராஜேஷ் இயக்கத்தில் ‘கடவுள் இருக்கான் குமாரு’, ஷங்கர் குணா இயக்கத்தில் ‘கெட்ட பையன் சார் இந்த கார்த்தி’, சசி இயக்கத்தில் சித்தார்த்துடன் பெயரிடப்பாடாத படம், ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஒரு படம் என நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ் அடுத்து ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ மற்றும் ‘ஸ்ரீகிரீன் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனங்களுக்கும் படங்களை நடித்து கொடுக்க ஒப்பு கொண்டுள்ளார். ‘டார்லிங்’, ‘த்ரிஷா இல்லானா நயன்தாரா’, ‘பென்சில்’ என தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் ஜி.வி.பிரகாஷ் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் விரும்பும் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார். கடந்த சில வருடங்களாக ஒரே சமயம் அதிக படங்களை கையில் வைத்துக் கொண்டு பிசியாக நடித்து வரும் ஹீரோ யார் என்றால் அது விஜய்சேதுபதி தான்! இப்போது அவரது ரூட்டில் ஜி.வி.பிரகாஷும் அதிக படங்களை கையில் வைத்துக்கொண்டு சினிமாவில் பயணித்து வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;