ரிலீஸ் தேதி குறித்த ராஜா மந்திரி!

சுசீந்திரன் உதவியாளர் உஷா கிருஷ்ன இயக்கியுள்ள படம் ‘ராஜா மந்திரி.

செய்திகள் 8-Jun-2016 3:02 PM IST VRC கருத்துக்கள்

கலையரசன், காளி வெங்கட் கதாநாயகர்களாக நடித்திருக்கும் படம் ‘ராஜா மந்திரி’. சுசீந்திரனுடன் ‘பாண்டிய நாடு’, ‘ஜீவா’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த உஷா கிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகிகளாக ஸோயா, வைஷாலி நடித்துள்ளனர். இவர்களுடன் பாலசரவணனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படம் ஏற்கெனவே பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு பிறகு ரிலீசாகாமல் இருந்து வந்தது. இந்நிலையில் ‘ராஜா மந்திரி’ ரிலீஸ் குறித்த தகவல் ஒன்றை இயக்குனர் உஷா கிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இம்மாதம் 24ஆம் தேதி ‘ராஜா மந்திரி’ ரிலீசாகும் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசை அமைத்துள்ளார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘எட்செட்ரா என்டர்டெயின்மென்ட்’ பேனரில் வி.மதியழகன் மற்றும் ஆர்.ரம்யா, ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் மூலம் பெண் இயக்குனர்கள் வரிசையில் உஷா கிருஷ்ணனும் இடம் பிடித்து விட்டார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குரு உச்சத்துல இருக்காரு - டிரைலர்


;